அவளே_என்_நிவாரணி💚💛💙🩵🩷

என் விழிகளை மூடி ரசிக்கிறேன்
மொழிகளை தேடி ருசிக்கிறேன்
உன் நினைவுகள் தந்த
சுகமானது , என் கவலைகளை 
தீர்க்க வல்ல மருந்தானது..
வலிச் சுமைகளை குறைத்து 
மனமகிழ்வை  நிறைத்து 
மனதோடு இதம் தரும் நீயே தரும் காதலென்பதால் தொடரட்டும் 
உனக்கும் எனக்குமான இப்பந்தம்...
அழகான அமைதி தரும் இந்த அழகான வலி எனக்கு என்றுமே
வலி தீர்க்கும் நிவாரணம்....!!!

#தமிழிந்தியன்✍️
 

Comments

Popular Posts