#மழைக்காதலி..!!

ஏதோ தவறிப்போய் சட்டென
தோன்றி பொய்த்திடும்
மழையும் அல்ல...நான்...
இருந்தும் இல்லாது மாயையாய்
தோன்றிட மறையும் வெற்று
கானல்நீரும் அல்ல... நான்...
உன்னுள் நினைவுகளேனும்
காரிருள் மேகமாய் உயிர்வரை
சூழ்ந்து தொலைதூரமாகிப் போன
நம் கானா அன்பாயினும் நம் உணர்வுகளால் உயிர்ப்பித்து
அளவிலா வாஞ்சையோடும்
காலம் தவறா மும்மாரியாய்
சும்மா போட்டு வெளுத்து வாங்கிடும்
எப்போதுமாய் காலம் தந்த
மாறா "பருவமழையடி" உனக்கென நான்...வருவேன்... உன் வசந்தமாய் உன்னை உயிர்பிக்க...தருவேன்...
இனிய சுகந்தமாய்...
உனக்குள் ஒளியேற்ற...!!!

#தமிழிந்தியன் 💕



Comments

Popular Posts