#இல்லறக்காதலி..!!!
மீறி கடந்துசெல்ல வைத்தது என்னவோ உன் வெடுக்கு வெடுக்கென விழித்த பார்வை
எப்போதும் இதய ஆசுவாசமாயும்... எண்ணங்களின் ஆசையாயும்...
மணநாள் காலந்தொட்டு
மனதோடு ஒன்றாய் பந்தலிட்டு ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு நொடியும் பரஸ்பரமாகி
பேசிக்கழித்ததிலென
உனக்காய் வாழும்போதும் தான் உன்கூட மகிழ்ந்த தருணங்களை
தவமாய் தவமென உணருகிறேன்....
மனம் கசந்த நிமிடங்களையும் கூட மறவாது மறக்கிறேன்...
அவ்வப்போது புதுபுது சண்டைகள்
அழைக்காமலே வந்துப்போகும்
சிலநேரம் தேவைக்காய்
சிலநேரம் காரணமில்லா பொழுதுப்போக்காய்... இருந்தும்
இரண்டையும் ரசிப்போம்..
மறுநொடியே மாற்றுமில்லாது இரண்டற கலப்போம்...
இதுவரை காதலை
இருவரும் சரிவன
புரிந்ததே நம் இல்லறக்காதலின் இதுவரை ஆசாத்திய வெற்றி...
ஏதோ ஒரே சமயத்தில் நான்கைந்து
"ஒலிம்பிக்" தங்கபதக்கங்களை ஒருசேர நாமே அடித்தாய் சந்தோசம்...
இருக்கும்ல.. இப்படியேதான் இருக்கணும்.. இனி தொடர்
வருடங்களிலும் இது தொடரனும்
அந்த சந்தோசமே போதும்
"இல்லற கழிப்பின்" எல்லை எதுவரைனு நம்மை
இழுத்துட்டே போகும்...
என்றென்றும் நிரந்தரமாய்..!!!
#ரவின்ஜெ ✒️
Comments
Post a Comment