#இரவுகாதலன்

இரவின் மடியில்
நிலவின் துணையில்
நம்மிருவரையும் குளிர்தென்றல்
வருடி வாட்டிடும் நேரம்,
இதயம் பகிர்ந்திட்டுபின்
தேகம் தெரிந்த இடங்களில்
என் மீசைமுடி முத்தங்களால்
நான் தந்த கையொப்பமே போதும்
நிலவும்கூட காலையிற்
வெட்கிட காணாமல் போகும்..!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts