#மாலைகருக்கலில்...

மாலை கருக்கலில் மங்கிடும்
வெளிச்சம்  வானமகள் அமைதியாய் மேகங்களை கலைத்து 'நிலாதேவதை'
சற்றெனும் உலாவர  போகிறாள்,
நான் அமர கண்டது;
கண்ணெதிரே வண்ணமலர்கள்
பூத்து புடைசூழ  நறுமனமாய் ஆரத்தழுவி இனியதொரு தருணமது
கதிரவன் மறைந்திட்ட நேரம்
இதமாய் நெஞ்சை கொஞ்சிட வைத்து
நினைவுகளை அசைபோட்டிடசெய்து
மெல்லிய தென்றலின் வாசனையோடு என்னை உரசிட செல்லும்,
இருந்தும் அமைதியோ அமைதி
மழைச்சாரலின் அனுமதியோடு குளிரினை தருவித்து மகிழ்ந்த எனக்கு
எங்கோ தொலைவில் முகவரி கேட்டு குயிலினகூட்டம் கெஞ்சிடும் ஓசை
இடைஇடையே கானகுருவிகளின் எழுப்பிடும் அறியா பாஷை
இறைதேடிய இனங்கள் தன்னிருப்படம்
திரும்பிட கண்டதும் இனம்புரியாத ஆசை அத்தனையும் இயல்பாய் அனுபவித்ததில் வாழும்உலகில்
"சொர்க்கமதை"மிச்சமில்லா அனுபவிக்கும் அத்தனை அதிர்ஷ்டசாலியா நான்..இருக்கும்.. மீண்டுமோர் அமைதி தேடி...!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts