#மனையாழி

உறங்கிய பின்னும்
உறங்காது உன்
விடியலின் வரவு
கனவெனும் சோலையில்...

தவித்த இரவுகளை
துடித்த தனிமைகளை
முடித்து வைக்க வந்த
தேவதையாய் என் "மனையாழ்"...

உயிராய் உருவாய்
என்  குடும்ப கருவாய்
இருந்து சந்ததி தழைத்தோங்க
ஓன்றினைந்து சீர்தூக்கிய 'அன்னை'யாய்..

என்றுமே நம் காதலும்
அதை சார் ஊடலும் தொடர
தொடர்ந்து காதலிப்போம்
அடுத்த உண்மை இல்லறம்
எடுத்துகாட்டாய் வர....!!!

#ரவின்ஜெ



Comments

Popular Posts