#பிறவிப்பயன்

போட்டி உலகினுல்
எல்லா நலமுடன் வாழ
என்னை வளமுறச் செய்தாய்
அறிவினில் திகழ
உளச்செறிவினை
படிப்பினில் தந்தாய்
தீவினைத் தெறிக்க
ஒழுக்கத்தில் தழைக்க
அயரா மன்றாடி  கடவுளிடம்
வேண்டிட உழைத்தாய்...
இருந்தும்,
சிலவேளைகளில்
உனக்கென்ற கவலையில்
பாவிநான், எனக்கென்று
இருந்ததால் என்னவோ
இன்றும் நான் அமைதிக்கு
கடல்தாண்டி வந்தபின்னும்
இங்கு
மெனக்கெட வேண்டிருக்கு...
இது சுமையானாலும்
உனக்காய்
சுகமாய் ஏற்றுக்கொள்வேன்...
இதுவும் கடந்தேபோகுமென
மனதால் தேற்றிக்கொள்வேன்...
விதியின் மொழியறிந்து
அதன்சார் மாற்றிக்கொள்வேன்..
எங்கிருந்தோ ஒளி தரும்
அஃனி சூரியனாய் நீ,
என்றும் உன்
ஒளிசேர்க்கையில் ஒளிரும்
புவியின் ஒர் உயிராய் நான்...
இதுவேபோதும்...!!!






Comments

Popular Posts