#எதிர்நீச்சல்

எதிர்வந்த தடைகள் புதிதல்ல,
காணவிழையும் விடைகளும்
நமதல்ல, தன்னலமிக்க
உலகில் உன் நலம் பேணும்
உண்மை உறவுகளும் உனதல்ல
எதை நோக்கி இந்த
நீண்ட பயணம்..?
மரணமெனும் முடிவை தெரிந்தும்
பஞ்சமில்லா சூழ்ச்சிகள்
நெஞ்செமெல்லாம் வஞ்சனைகள்
பிஞ்சுமனமும் வேண்டிட
கொஞ்சமாகிலும்
பகை மறந்து
வன்மம் துறந்து
அன்பு கடந்து யார்க்கும்
கொடுத்து விட்டு செல்லாறாகினும்
கெடுத்துவிட்டு போகமால்
வாழ்ந்துவிட்டு போவோம் மண்ணின் உறவுகளே...!!!


#ரவின்ஜெ

Comments

Popular Posts