#தந்தையின்சேயாய்_நான்


எம்மை உலகின் நுனியில்
மேலுயர வைத்து  பார்த்திட நாளும் எமக்காய் கடைநாழி உழைத்து,
உம் வயதும் கரைய வாழ்ந்து,
உம் ஊன் உருக தேய்ந்து,
எமை வளர்த்தி மெய்த்திட்டதே உண்மை, ஒருபோதும் உமக்காய்
ஏதும் தனியா சேர்க்கா வண்ணம், கண்ணில் இமைகாத்து
இமையின் வழிகாத்து
வழியிலே விலகா
வடிகால் வைத்து என்னை
ஒருசேர் வாழ வளர்த்ததே
உன் மாறாத் திண்ணம், உயிரோடிருந்தபோது உன் திருவடி
கழுவிட பாக்கியமல்லேன்
நீர் எனைவிட்டு மறைந்தபோது
ஏதுமறியா சேயாய் நின்று
வேடிக்கைப் பார்த்து
அருகே நின்றவன் ...
பாவமதை அறியா செய்திட்டேன்
புரையோடி போனபின் காலமது
என் மனதோடு நீங்கா
இதயம் உருகி குருதியும்
கண்ணீராய் மருவி
கலங்கிட வைக்கும்
அணையா கோலமது....
தந்தையே! என் நிலை மறந்தாலும்
உனை எங்கனம் மறவேன்...??
உனை இனி எப்படி தொடர்வேன்..??

#ரவின்ஜெ

Comments

Popular Posts