#ஸ்டெர்லைட்அரசியல் #தமிழகதாக்கம் #தலைமுறைஏக்கம்!!!
மதி கெட்ட அரசால்
குடி கெட்டு போனதே
விதியென இனி இருந்தால்
நிற்கதியென ஆனதே
சதி வலை பின்னியே
தமிழ் உறவின் வாழ்வுநிலை
கேள்விகுறியாய் போனதே...
துப்பட்டாவை துளைத்த
தோட்டக்களில் தான்
உன் துரோக அரசியலின்
சாயம் வெளிப்பட்டது....
ஏவல்துறை நண்பனாய்
இதுவரை இருந்த நீ எப்போது
துரோகியாய் மாறினாய்..??
அன்று ஓட்டை விலைக்கு
நீ கொடுத்ததால் இன்று
நாட்டைக் கெடுக்கிறான்...
எவனோ வெளிநாட்டு
மார்வாடி வாழ
ஊர்கூடா எம்மண்ணை
தாரைக் கொடுக்கிறான்...
நிதம் மாடாய் உழைத்தவன்
கேள்வி கேட்டதால்
அடித்து நொறுக்கிறான்..
மக்களோடுச் சேர்த்து
எம் தமிழக வீட்டை
தரைமட்டமாக்கிட துடிக்கிறான்...
ஏவல் துறை கொண்டு
கலவரமெனும் பெயர்கண்டு
நீர் உயிர் குடித்த
ஏதுமறியா உயிர்களுக்கு தரும்
"எச்சநிவாரணம்" என்ன ஈடா..???
அதுவும் மக்கள்வரி
பணமேதானே மூடா..
ஓரிரு நாட்களில் ஆறுதல் பேரில்
வந்து படிமிதிப்பாய் வெட்க கேடா...
உண்மை உலகிற் உணர்ந்திடும்
வரை பணிந்திடாது
தரங்கற்ற ஆட்சியகற்றிடும்
வரை பொறுத்திடாது
அடக்கு வன்முறையில்
கட்டுண்டு போயிடாது
ஒடுக்க நினைத்தால் "தமிழனம்"
என்றுமே விலகிடாது....
அரசின் தீவிரவாதத்தில்
துணிந்தே இறந்த ஆன்மாவும்
உனை மன்னிக்காது போகட்டும்...
சகமனித வாழ்வுரிமை
போராட்டம் அடுத்தநிலை
வெற்றிகடந்தே மாறட்டும்....
பற்றிய நெருப்பும் அணையா
எறியும்வரை உன் "பினாமி
அரசியலுக்கு" சாவுமணி
அடிக்க தொடங்கியாச்சு...
அடிமைவாத அரசியல்
இனி செல்லாது செருப்படியாச்சு...
மீண்டும் உனை அரியணை
ஏறிட எண்ணமிருந்தால்
நாசமாய் போயாச்சு...
மீறிட ஏறிஅமர்ந்தால் என்
"தமிழண்ணை" சுயமரியாதையாக
தென்னக கடலுக்குள்
மாய்த்தேக் குடி புகுழ்வாள்...!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment