#நீட்தேர்வு #தங்கமங்(கை)அனிதா



நீட்' டினை போராடி தமிழக
காலடியில் புதைத்துப்
பார்த்திடும் விடைக்குமுன்
நீ நிரந்திர விடுமுறை எடுத்து
முந்திகொண்டு மண்ணுள்
புதையுண்டு போனாயே...
இறுதியென ஆட்சிப்பேய்களின்
துரோகம் வென்றதாய் காட்சி
சுயநலமற்ற ஏழைநெஞ்சினில்
சோகஉருவாக நீயே நின்றதே சாட்சி...
தரமற்ற எச்ச ஆட்சியாளர்
சதிகளின் மத்தியிலும்
இன்றெனும் உன் நினைவேந்தி புலம்பினாலும் தங்கமே,
இதுதான் மறைந்தும்
நீங்கா நீ கண்ட வெற்றி...!!!
சமுகம் தூங்கினாலும்
உன் ஆன்மா நிச்சயம் மன்னிக்காது..!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts