#நவயுகநாயகி

அந்தியும் செல்லமாய்
கொஞ்சிடும் வேளையில்
சூரியசந்திரன் சங்கமித்திடும்
மஞ்சற்மேகங்கள் கரைந்திடும்
கானமயில் ஓதுங்கிடும்
பேடைக்குயில் அடங்கிடும்
தனிமையை விரட்டிட
உனக்காய் காத்திடும் நான்
நவயுகநாயகி நீ வரும் திசையறிந்து
விழிமேல்வழி பார்த்தது
நின்றதுதான் மிச்சம்,
மயக்கிடும் உன் பார்வையில்
பேச தயங்கிடும் என் வார்த்தைகள்
யாவுமே எழுதி வைத்திடா
"நவயுக காதல் கவிதைகள்"
எனைப்போல அதுவும்
தலைப்பிற்காய் உன் முகவரித்
தேடி எனக்கல்லவா
கோரிக்கை வைக்கின்றன...!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts