#நாட்டின்_சாபகேடு!!!


ஒவ்வொரு விடியலும்
பூமனம் மாறா பச்சிளம்பிஞ்சுகளின்
பாலியியல் கொடுமைப் பதிவுகள்
நம் நெஞ்சுருக்கும் மாறா ரணங்கள்,
வரலாற்றின் பெயர்த்தெடுக்க
முடியா ஆறாச்சுவடுகள்,
மனிதம் தொலைத்த
காமவெறியின் உச்சத்தின்
தப்பிழைக்கும் எச்சகார்களை
மிருகத்திற்கு இணையா பேசாதீர்கள்
பாவம்! ரோசமுள்ள "ஐந்தறிவு"
தன்னைத்தானே கேவலமாய்
எண்ணி மாய்த்துக்கொள்ளும்...

நொச்சகாரனின் உயிருப்பினை
அறுத்தெடுத்தாலும் அவன் குருதி
அவனை மன்னிக்காது...
ஓரறிவாய் இனி பிறப்பெடுத்தாலும்
ஊன் அழுகி, சீல் பிடித்து,
ஆன்மா நிற்கதியடைமால்
சபித்து சாவவேண்டும்....

எம் "பாரதமாதா" உருவினில் இன்றும்
எம் மாந்தர்களை போற்றுபவர்களும்
அன்பின்வழி ஏணி ஏற்றுபவர்களும்
துணை நின்று காட்டுபவர்களும்
இதயத்தில்வைத்து பார்ப்பவர்களும்
இம்மண்ணிலே இருக்கும்வரை
"பெண்களின் தேசம்தான்டா"
என் இந்தியா..மாற்றமில்லை...!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts