#உன்வாழ்க்கை_உன்கையில்.!!!

நம் வாழ்க்கை,
அதிசயமானது....ஆச்சரியமானது...
அபூர்வமானது....அர்த்தமுள்ளது.....
உத்தமமானது...ஊர்ஜிதமானது....

நிமிடங்கள் நிரந்திரமில்லா
உன் வாழ்க்கை பயணத்தில்,

நம் பலம் தனியே..
நம் பலவீனம் தனியே..
நம் பிரச்சனை தனியே..
நம் தீர்வும் தனியே..
நம் சிந்தனை தனியே..
நம் அனுபவம் தனியே..
நம் பயம் தனியே..
நம் நம்பிக்கை தனியே..
நம் வலி தனியே..
நம் தேடல் தனியே..
நம் கேள்வி தனியே..
நம் பதில் தனியே தான்

அடுத்தவரின் வாழ்க்கையைப்
பார்த்து நிழலாய் வாழ
நகலெடுக்க நினைக்காமல்
உனக்கான உன் வாழ்க்கையை
மட்டும் நீ வாழ்ந்து பார்...
வாழ்வின் ரசனையும்
அர்த்தமும் புரியும்....!!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts