தழுவிடும் காற்றே
தடுமாறாமல் உரசிடும் நேரமிது,
தவறாமல் காத்திருப்பேன்
தயங்காமல் பூத்திட வா
சாலையோர மரம்உதிர்ந்த
பூக்களை கோர்த்திருப்பேன்
வரும் வேளை பார்த்து வா
முறைத்து பேசி சிரித்து மகிழ
இடம்தனை காட்டியிருப்பேன்
வருங்காலம் குறித்துப் பேசவா
உன் கால்தழுவிடும் ஓசையினை
மலர்குடுவையில் சேர்த்திருப்பேன்
குயிலும் தயங்கிட
சேர்ந்திசை பாடிட மீட்ட வா
உதிர்ந்த பூக்களும் உன்
கால்பதிந்து மோட்சமடைய
Comments
Post a Comment